தூத்துக்குடி, ஜூன் 12: தூத்துக்குடியில் இன்று கலைஞர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கனிமொழி எம்பி பங்கேற்று நல உதவிகளை வழங்குகிறார். தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று(12ம் தேதி) மாலை 6 மணியளவில் சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகிக்கிறார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகிக்கிறார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்கிறார். திமுக துணை பொதுச்செயலாளரும், பாராளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்பி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நலத்திட்டங்கள் வழங்கி பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்குமாறு அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு விடுத்துள்ளார்.
கலைஞர் 102வது பிறந்த நாள் நல உதவிகள் வழங்கும் விழா
0