கிருஷ்ணகிரி, ஜூன் 4: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில், நகர திமுக சார்பில் மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், வட்ட பிரதிநிதி அமீர்சுஹேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., பங்கேற்று, கருணாநிதியின் உருவப்படத்திற்கும், அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லாம், நாகராஜ், சித்ரா சந்திரசேகர், மற்றும் அன்பரசன், நகர்மன்ற உறுப்பினர்கள் மீனா நடராஜன், சுனில்குமார், சீனிவாசன், மீன் ஜெயக்குமார், தேன்மொழி மாதேஷ், மத்தீன், பிர்தோஸ்கான், செந்தில் குமார், பாலாஜி, மதன்ராஜ், நிர்வாகிகள் ஜான்டேவிட், கனல் சுப்பிரமணி, சரவணகுமார், சரவணன், மாதவன், பாப்பாரப்பட்டி குமார் மற்றும் வட்ட பிரதிநிதிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில், பேரூர் செயலாளர் பாபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில், கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், நகர செயலாளர் நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொருளாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், சித்ரா சந்திரசேகர், பர்கூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பி.டி. அன்பரசன், சசிகலா தசரா, மணிகண்டன், சாஜித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.