மயிலாடுதுறை,ஆக.19: மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் படி இதில் விடுபட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் வருவாய்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய நிட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்புசாரத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெரும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கவலஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் சேர நாளை (19ம்தேதி) மற்றும் நாளை மறுநாள் (20ம்தேதி) அந்தந்த நியாய விலைக்கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முகாம்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.