உடுமலை, ஆக. 7: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ், முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நிறைவடைந்துள்ள நிலையில், 2-ம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் நேற்று துவங்கியது.உடுமலை நகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த முகாம் நடக்கிறது. பொதுமக்கள் ஏராளமானோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இடைவெளியின்றி தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.இவர்களுக்கு டீ, காபி உள்ளிட்ட சிற்றுண்டி வசதி செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. அடிப்படை தேவைகளை ஊழியர்களுக்கு வருவாய்த்துறையினர் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.