திருப்புவனம், ஜூன் 4: திருப்புவனம் பகுதியில் நேற்று கலைஞர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அச்சங்குளம் முருகன் தலைமையில் திமுகவினர், திருப்புவனம் மெயின் ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பாக பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களுக்கும், பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினர். பூவந்தியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் அப்பாச்சாமி, முனைவர் இளங்கோ, வழக்கறிஞர் மணிமாறன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை தலைவர் பூவந்தி பன்னீர்செல்வம், பூவந்தி ஊராட்சி தலைவர் விஜயா ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கொண்டாட்டம்
0
previous post