குன்னம், ஜூன் 14: கலைஞர் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் வழிகாட்டுதல் படி வேப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் அந்தூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா எழுது பொருட்களைபெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் 110 மாணவர்களுக்கு வழங்கினார்கள்.அந்தூர் கிளை செயலாளர் செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி எம் டி செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.