தஞ்சாவூர், ஜூன் 4: கருணாநிதி பிறந்தநாள் விழா செம்மொழி நாளாக கொண்டாட்டம் திருவையாறு, கருப்பூரில் தலா 102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் வழங்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்றும் , தமிழ்நாடு முழுவதும் 102 இடங்களில் நல திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என்றும் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தஞ்சாவூர் மத்திய மாவட்டம் திருவையாறு பஸ் நிலையம் அருகில் செம்மொழி நாள் விழா நடைபெற்றது.மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
இதில் 102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முரசொலி எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்ஏ, செல்வம், மாவட்ட அவைத் தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் அண்ணா, தஞ்சை மாநகர செயலாளர் மேயர் சண் ராமநாதன், திருவையாறு நகர செயலாளர் நாகராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, கனகவள்ளி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய செயலாளர்கள் சிவசங்கரன், அரசபாகரன், கௌதமன் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதே போல் கருப்பூரிலும் 102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்ப ட்டன. கருணாநிதி உருவ சிலைக்கு மரியாதை செலுத்த ப்பட்டது. கண்டியூரில் கருணா நிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் மத்திய மாவ ட்டத்திற்கு உட்பட்ட அனை த்து இடங்களிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.