சிவகங்கை, செப்.1: சிவகங்கையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளிக் கல்வித்துறை இலக்கிய மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டி நடைபெற்
றது. சிவகங்கை வட்டார வளமையத்தில் பேச்சு போட்டியும், கேஆர்.மேல்நிலைப் பள்ளியில் கட்டுரை, கவிதை போட்டியும் நடைபெற்றன. இப்போட்டிகளில் 6முதல் 9ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 10முதல் பிளஸ்2 வரை பிரிவாகவும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிகளை வட்டார வளமையத்தில் மேற்பார்வையாளர் ரூபாராணி தொடங்கி வைத்தார். தமிழாசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். வட்டார கல்வி அலுவலர்கள் இந்திராணி, வளர்மதி கிரேஸ், ஒருங்கிணைப்பாளர்கள் எட்வின் செல்வராஜ், தங்கமலர் ஆகியோர் மேற்பார்வையில் நடந்த இப்போட்டிகளில் சிவகங்கை வட்டாரம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.