நிலக்கோட்டை, அக்.16: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிலக்கோட்டையில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் தடுப்பு இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம், பேரூர் திமுக மற்றும் தனியார் கிளினிக் இணைந்து டெங்கு, மலேரியா, மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் தடுப்பு இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.
பேரூர் செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை முன்னிலை வகித்தார். துணைச்செயலாளர் கதிரேசன் வரவேற்றார். முகாமில் மர்ம காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு சித்த மருத்துவம் மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், கவுன்சிலர்கள் தியாகு, சிலம்பு செல்வன், அமைப்புசாரா ஓட்டுநரணி பொறுப்பாளர் சுந்தர் மற்றும் ஒன்றிய பேரூர் கழக பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டை பகுதி திமுக கிளைச் செயலாளர் அழகர் நன்றி கூறினார்.