கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாங்கோட்டை ஊராட்சியில் உள்ள கீழப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் சம்மந்தமான மருத்துவ முகாம், நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு மாங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா ரெத்தினம் தலைமை தாங்கினார். இலவச பொது மருத்துவ முகாமில் மருத்துவர் முருகேசன், மருத்துவர் முரளிதரன் மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இலவச பொது மருத்துவ, பல்வேறு சிகிச்சைகளையும், சர்க்கரை நோய் எவ்வளவு பற்றிய மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொண்டனர். பொது மருத்துவமுகாமில் 125 பேர் சிகிச்சை பெற்று பயடைந்தனர். மேலும் 15 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். இந்த மருத்துவ முகாமில் மருத்துவ குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.