நெல்லை, செப்.4: நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொடர் இலக்கிய சொற்பொழிவு 8வது கூட்டம் நடந்தது. முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடந்து வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் 8வது கூட்டம் காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி தலைமையில் நடந்தது. கவிஞர் முத்துசாமி முன்னிலை வகித்தார். கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி வரவேற்று பேசினார். கூட்டத்தில் சொன்னதை செய்வோம் என்ற தலைப்பில் வாசகி வளர்தமிழ் மன்றத்தின் துணை செயலாளர் தச்சை மணி சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
அவருக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் நினைவுப் பரிசு வழங்கினார். வள்ளிசேர்மலிங்கம், புன்னைசெழியன் வாழ்த்தி பேசினர். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட ரம்யா, துரை ஆகியோருக்கு கணபதிசுப்பிரமணியன் நூல்களை பரிசாக வழங்கினார். கூட்டத்தில் எழுத்தாளர் நாறும்பூநாதன், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர்கள் பாமணி, ஜெயபாலன், சக்திவேலாயுதம், பிரபு, அகிலன் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை சதக்கத்துல்லா கல்லூரி பேராசிரியை பொன்சக்திகலா தொகுத்து வழங்கினார். கவிஞர் சுப்பையா நன்றி கூறினார்.