பெரம்பலூர்,ஆக.22: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா. எம்.பி., பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர் தனது சொந்த செல வில் வாங்கிக் கொடுத்த, ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் 155 பேர்களுக்கான, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீருடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,
மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணை செயலாளர் துரைசாமி, தலைமைசெயற் குழு உறுப்பினர் ராஜந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் செல்வலட்சுமி சேகர், தொமுச மாவட்ட கவுன்சில் பேரவைச் செயலாளர் ரெங்கசாமி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவாஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.