புதுக்கோட்டை, மே 30: கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சந்தைபேட்டையில் ரூ.6.42 கோடியில் புதிய தினசரி காய்கறி அங்காடி திறக்கப்பட்டுள்ளது. 3711.20 ச.மீ. பரப்பளவு கொண்டது. 160 கடைகள் கட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி, சந்தைபேட்டையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.42 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தினசரி காய்கறி அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர்அருணா, தலைமையில் கலந்து கொண்டார்.
பின்னர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் மீது அதிக அக்கறைகொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் பொதுமக்களுக்காக சாலை வசதி, மின் வசதி, குடிநீர் வசதி, காய்கறி அங்காடி திறப்பு உள்ளிடட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 30 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் 11 முடிவுற்ற பணிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 188 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் 3 முடிவுற்ற பணிகள், நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 102 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் 19 முடிவுற்ற பணிகள், பேரூராட்சிகள் ஆணையரகத்தின் சார்பில் 77 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் 14 முடிவுற்ற பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 60 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 2 முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 59 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப்பணிகள், நகராட்சி நிருவாகத் துறை சார்பில் 15 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகள், பேரூராட்சிகள் ஆணையரகத்தின் சார்பில் 18 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 19 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 புதிய வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார். இதில், தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக, புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி, சந்தைபேட்டையில் தினசரி காய்கறி அங்காடி திறப்பு விழா நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்பட்டது. இந்த அங்காடியில் 160 கடைகள், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, சிற்றுண்டியகம், ஆண், பெண் கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 3711.20 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.42 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தினசரி காய்கறி அங்காடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் இந்த தினசரி காய்கறி அங்காடியை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
புதுக்கோட்டை மாநகராட்சி மேயர்.திலகவதி செந்தில், புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர்.லியாகத் அலி, புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தில்நாயகி, மாமன்ற நல அலுவலர் காயத்ரி சங்கர், நகர பொறுப்பாளர் ராஜேஷ் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சனிதோறும் படியுங்கள்
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.42 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தினசரி காய்கறி அங்காடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் இந்த தினசரி காய்கறி அங்காடியை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்