சிவகங்கை, செப்.15: சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:முதலமைச்சரால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் விளக்கங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக, உதவி மையங்கள் தொடங்கப்பட்டு செல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் அலுவலகத்தில் 78451 45001 என்ற எண்ணிலும், சிவகங்கை ஆர்டிஓ அலுவலகத்தில் 78457 38002 என்ற எண்ணிலும், தேவகோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் 78450 14004 என்ற எண்ணிலும், தாலுகா அலுவலகங்கள் சிவகங்கை 84388 56008, மானாமதுரை 89257 86003, காளையார்கோவில் 84389 57006, திருப்புவனம் 89256 64001, இளையான்குடி 90423 17001, திருப்பத்தூர் 89250 78921, காரைக்குடி 88073 78005, தேவகோட்டை 88703 62101, சிங்கம்புணரி 81225 76001 என்ற செல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.