கரூர், செப். 4: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனையைத் தடுக்க சம்பந்தப்பட்ட போலீசார், மதுவிலக்கு போலீசார் சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குட்கா பொருட்கள் விற்பனையைத் தடுக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், கரூர் ரயில்நிலையம் அருகே ஒரு பகுதியில் மர்ம மூட்டை கிடப்பதாக, டவுன் போலீசார்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற போலீசார் சோதனை செய்தபோது, 40 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து, அவற்றை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.