திருவாரூர், செப். 5: விளையாட்டு துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள திருவாரூர் மாவட்டதை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார், இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: விளையாட்டுத்துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியத்தொகையாக மாதம் ரூ.6 ஆயிரம்- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் அனுப்பிவைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான தகுதிகளாக சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடங்களில் வெற்றிபெற்றிருத்தல் வேண்டும் அல்லது சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
கலெக்டர் தகவல் திருவாரூர் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
previous post