புதுக்கோட்டை, ஜூன் 18: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நெடுஞ்சாலைலையில் வல்லத்திராக்கோட்டை பகுதில் நான்கு வழிச்சாலையை பணியை நெடுஞ்சாலைத்துறை திருச்சி கண்காணிப்பு பொறியாளர் இளம் வழுதி ஆய்வு செய்தார். தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி நெடுஞ்சாலைதுறை அமைச்சர் மற்றும் தலைமை பொறியாளர் வழிகாட்டுதலின்படி நெடுஞ்சாலை துறையில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் ஆய்து செய்து வருகின்றனர். அதன்படி, புதுக்கோட்டை அறதாங்கி நெடுஞ்சாலை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாலை அமைக்கும் பணி, சென்டர் மீடியன் அமைக்கும் பணி மற்றும் செடிகள் நடும் பணிகள் என பல பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அறந்தாங்கி நெடுஞ்சாலைலையில் வல்லத்திராக்கோட்டை பகுயியில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை திருச்சி கண்காணிப்பு பொறியாளர் இளம் வழுதி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், அறந்தாங்கி கோட்டபொறியாளர் மாதேஸ்வரன் உதவி கோட்டபொறியாளர்கள் ரவிச்சந்திரன் மற்றும் உதவி பொறியாளர் தியாகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் தகவல் அறந்தாங்கி நெடுஞ்சாலையில் பணிகள் தீவிரம்
0