ஊட்டி, செப். 6: நீலமலையின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கல்லட்டி மாதா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நீலமலையின் வேளாங்கண்ணி என்று கல்லட்டி மாதா திருத்தலம் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. 7ம் தேதி மாலை (நாளை) 6 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. தொடர்ந்து 9 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது.
15ம் தேதி காலை திருவிழா நடக்கிறது. இதனையொட்டி அன்றைய தினம் காலை 10 மணிக்கு கூட்டுப்பாடற் திருப்பலி நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது. பகல் 1.30 மணிக்கு அன்பின் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசிர்வாதம் வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.