தேனி, ஜூன் 18: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநிலச் செயலாளர் நீதி ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்து ஜூலை 1ம் தேதி துவங்க உள்ள புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை துவங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறை ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த கருப்பன ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.