தேனி, ஆக. 31: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் தர்மர் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகராஜ், ஜெயபாண்டி முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏ பாலபாரதி கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். அப்போது, அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொட்டல் களத்தில் சுமார் 520க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்தில், தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளை பட்டா வழங்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன் முருகன் கண்ணன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.