திண்டுக்கல், ஜூலை 1: திண்டுக்கல்லில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 360 மனுக்கள் பெறப்பட்டன.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் தொடர்பான 360 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் கூட்டத்தில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். மேலும், ஊரக வளர்ச்சித்துறையில் பணி ஒய்வு பெறும் 4 பணியாளர்களுக்கும், சத்துணவு துறையில் பணி ஒய்வு பெறும் 7 பணியாளர்களுக்கும் கலெக்டர் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி வாழ்த்தினார். கூட்டத்தில், டிஆர்ஓ ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் சிவக்குமார், தனித்துணை ஆட்சியர் செந்தில்வேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.