திருவள்ளூர், பிப்.27: திருவள்ளூர் கலெக்டர் மு. பிரதாப் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, கூட்டுறவுத் துறை, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேருராட்சி, நகராட்சி உள்பட வேளாண் துறை சம்பந்தமான அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
0