கரூர், ஆக. 6: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் வழக்கத்தை விட குறைவான அளவிலான மக்களை வந்து மனு அளித்துச் சென்றனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் நடைபெற்று வரும் இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து மனுக்களை அளித்து சென்று வருகின்றனர்.இந்நிலையில் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை போன்ற நிகழ்வுகளுக்கு பிறகு திங்கள்கிழமை வந்த காரணத்தால் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் வழக்கத்தை விட மிகவும் குறைவான மக்களே வந்து மனு அளித்துச் சென்றனர். மக்கள் வரத்து குறைவு காரணமாக கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடியே காணப்பட்டது.