திருப்பூர், நவ.1: ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31ம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி அனைவரும் எடுத்துக்கொண்டனர். இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) சீனிவாசன், துணை இயக்குனர் (வேளாண்மை) மாரியப்பன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவிநாசி, நவம்பர்.1: அவிநாசி வட்டார பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.5 சதவீதம் போனஸ் வழங்குவது என இருதரப்பு பேச்சுவார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது.
அவிநாசி ஒன்றிய பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள், துணி உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள், விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நேற்று போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தீபாவளி போனஸ் 13.50 சதவீதம் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதில் விசைத்தறி, துணி உற்பத்தியாளர்கள்சங்கம் சார்பில் முத்துச்சாமி, செந்தில், சம்பத்குமார், தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடிய விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் முத்துச்சாமி, மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி, ஏஐடியுசி செல்வராஜ், ரவி, நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.