சேலம், ஆக.7: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு, சிறப்பு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 50 பெண்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து இடிஐஐ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல்காதர் கூறுகையில், ‘மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு சிறப்பு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பேட்ஜ்களிலும் 50 பெண்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தமாக 15 பேட்ஜ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதில் தற்போது வரை, மூன்று பேட்ஜ்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது,’ என்றார்.
கலெக்டர் அலுவலகத்தில் தொழில் முனைவோர் பயிற்சி
previous post