ஊட்டி, ஜூலை 29: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான மேல்முறையீடு மனு விசாரணை நடந்தது. மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் தலைமை வகித்து மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டார். இதில் தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரிவு 19(3)ன் கீழ் மேல்முறையீட்டாளர்கள் தாக்கல் செய்த இரண்டாவது மேல்முறையீடு புகார்கள் மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணை கூட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறையை சார்ந்த 78 வழக்குகளின் மீது தகவல் ஆணையரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.