காரைக்குடி, செப். 14: காரைக்குடி அருகே செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உழவர் உற்பத்திக் குழுவுடன் கலந்தாய்வு நடந்தது. முதன்மை அலுவலர் பாபு தலைமைவகித்தார். நபார்டு வங்கி மேலாளர் சுரேஷ்வரன் சிறப்புரையாற்றினார். உணவியல் துறை இணைப் பேராசிரியர் கமலசுந்தரி, விதை நுட்பவியல் துறை கீதா, உழவியல் துறை இணை பேராசிரியர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தரமான சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி நல்ல மகசூல் பெறுதல் குறித்து விளக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள ஆறு உழவர் விவாதக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.