கிருஷ்ணகிரி, மே 25: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை சிறப்பு உதவி தாசில்தார் பாரதி மற்றும் அதிகாரிகள், குருபரப்பள்ளி ஜின்ஜூப்பள்ளி பகுதியில் ரோந்து பணி சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில், கேட்பாரற்று டிப்பர் லாரி நின்றது. அதில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, 4 யூனிட் கற்களை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து லாரியின் உரிமையாளர், டிரைவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
0