சேலம், ஆக. 18:சேலம் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி மண் மற்றும் கற்கள் வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கனிமவளத்துறை உதவி புவியியலாளர் பிரசாந்த் (29), காரிப்பட்டி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஏரிப்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் குவாரியில் உரிய அனுமதியின்றியும், வாகனத்திற்கான பதிவெண் இல்லாமலும் 10 யூனிட் கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் அனுமதியின்றி கற்களை கடத்திய 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும், குவாரியின் உரிமையாளரான ராஜ்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கற்களை கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
previous post