கறம்பக்குடி, பிப்.27: கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு 2 மக்கும் மற்றும் மக்காத குப்பை அள்ளும் வாகனங்களை வழங்கும் விழாவில் எம்எல்ஏ சின்னதுரை கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் 2021-22ம் ஆண்டிற்கான 15வது மானிய நிதி குழுவின்கீழ் நகராட்சி குடிநீர் வழங்கல் துறை சார்பாக நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மற்றும் நகர் புற அமைச்சர் உத்தரவின்படி ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சி க்கு 2 சுகாதார (மக்கும் குப்பை, மக்காத குப்பை அள்ளும்) வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கு கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை கலந்து கொண்டு பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட 2 சுகாதார புது வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் கறம்பக்குடி பேரூராட்சி துணை தலைவர் நைனா முகமது மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கருப்பையா, முருகேஸ்வரி, செண்பக வள்ளி, வளர்மதி, ஜன்னத் பேகம், பரக்கத் நியாஸ், பிரித்விராஜ், ராஜா, மஞ்சுளா தேவி, பரிதா பேகம்,ராஜசேகர், ரெங்கசாமி, மங்கையர்கரசி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்கள், தூய்மைபணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேரூராட்சி கோரிக்கையை ஏற்று 2 வாகனங்களை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.