கறம்பக்குடி, ஜூலை 5: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக கறம்பக்குடி காவல்துறைக்கு அப்பகுதியினர் தகவல்அளித்தனர்.தகவல் அறந்து வந்த எஸ்ஐ விக்னேஷ் தலைமையில் காவல்துறையினர், அனுமதி இன்றி திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த போது காவல்துறையினர் 9 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.