கறம்பக்குடி, ஜூன் 27: கறம்பக்குடி பகுதியில் முழுவதும் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்தது இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். ஆனால் நேற்று காலை கடும் வெயிலடித்த வேளையில் மாலை திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதன் காரணமாக ஒரு மணி நேரம் கறம்பக்குடி பகுதி முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. காற்று இல்லாமல் மிதமான மழை பெய்ததால்
பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.