கறம்பக்குடி, ஜூலை 13: கறம்பக்குடி அருகே பழுதடைந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துவார் ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. துவார், கெண்டையன்பட்டி, பெத்தாரிப்பட்டி, ஆண்டி குழப்பன்பட்டி, குலவாய்ப்பட்டி போன்ற பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு 2500க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் குலவாய்ப்பட்டி கிராமத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள், அனைத்து தரப்பினர் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள், பயணிகளின் நலன் கருதி பல ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டது. அனைத்து பயணிகளுக்கும் பயன்பெற்று வந்த இந்தப் பேருந்து நிறுத்த நிழற்குடை கடந்த சில மாதங்களாக பழுதடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து அமரும் கட்டைகள் பெயர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இந்த பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை இடி்து அக்கற வேண்டும் என பொதுமக்கள், பயணிகள கோரிக்கை விடுத்துள்ளனர்.