கறம்பக்குடி, ஆக.27: கறம்பக்குடி அருகே நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்பாரதி. இவர் வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பிராணியான நாய் ஒன்று அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்து கத்தியுள்ளது. அக்கம் பக்கத்தில் பார்த்து உடனடியாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிலைய அலுவலர் பொறுப்பு சிறைசீலன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்கள் விழுந்து கத்திக் கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். கிணற்றுக்குள் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
previous post