கறம்பக்குடி ஆக.23:கறம்பக்குடியில் கிணற்றில் விழுந்த ஆட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளாள விடுதி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று நேற்று அருகில் உள்ள கிணற்றில் விழுந்த விட்டதாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஆட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர் ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை பொது மக்கள் பாராட்டினர்.