கறம்பக்குடி, ஆக.5: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோயில் எதிரே குலக்கரையில் ஆடிபெருக்கு விழாவை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒன்று சேர்ந்து இறை வழிபாடு செய்தனர். குலக்கரையில் பேரிக்காய், கொய்யா பழம் போன்ற பழகள் வைத்தும் அரிசி கலவை செய்து வைத்தும் இறை வழிபாடு செய்து பெண்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு கட்டி அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தினர். மேலும், படித்துறைகளில் சிறப்பு வழிபாடு செய்தனர்.