கறம்பக்குடி,ஆக.31: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தட்டார தெரு காசிம் கொள்ளையை சேர்ந்தவர் ஜபருல்லா. இவர் அம்புக்கோவில் முக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனது ஆடுகளை ஆட்டுப்பட்டியில் அடைத்து உள்ளார்.
அதிகாலையில் எழுந்து பார்த்தபோது பெரிய ஆடு ஒன்று காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அனைத்து இடங்களிலும் தேடியுள்ளார். கிடைக்காத காரணத்தினால் மிகுந்த மன வேதனையில் உள்ளார். கறம்பக்குடி பகுதியில் தற்போது பல்வேறு இடங்களில் ஆடு திருட்டு சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.