கறம்பக்குடி, நவ.18: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகளில் பெட்டி கடைகளில் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா ) விற்பனை செய்வதாக கறம்பக்குடி காவல் துறைக்கு வந்த தகவல் வந்தது. இதையடுத்து காவல் துறையினர் எஸ்ஐ மார்ட்டின்ராஜ் தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்தனர்.
அப்போது கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியை சேர்ந்த சாகுல்அமீது (38), முகமது ஆசிக் (21) மற்றும் கறம்பக்குடி நெய்வேலி ரோடு பகுதியை சேர்ந்த செல்வம் (52) மற்றும் ரமணி (38) மற்றும் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த காதர்பாட்ஸா (52), நரங்கியப்பட்டு பகுதியை சேர்ந்த குமார் (42) ஆகியோர் தனித்தனியே பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் இருந்து மொத்தம் 60 பாக்கெட்டுளை பறிமுதல் செய்து அவர்கள் 6 பேர் மீது வழக்குபதிவு செய்து கறம்பக்குடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.