கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் அனுமதியின்றி மது விற்பதாக கறம்பக்குடி காவல் துறைக்கு வந்த தகவலை அடுத்து காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது கறம்பக்குடி அருகே கருப்பட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (31). நரங்கியப்பட்டு வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (35). இவர்கள் இருவரும் தனித்தனியே அம்புக்கோவில் முக்கம் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தனி தனியே மது பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 20 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கறம்பக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.