குளச்சல்,ஆக.4 : மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் சத்யகுமார் உத்தரவின்பேரில் குளச்சல் தீயணைப்பு நிலையம் சார்பில் ரீத்தாபுரம் பேரூராட்சி கரையாகுளத்தில் பருவமழையை எதிர்க்கொள்ளும் வகையில் மழை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடந்தது. குளச்சல் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஜெகன் தலைமையில், வீரர்கள் பொது மக்கள் முன்னிலையில் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.