கரூர், ஆக. 6: கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி அருகில் ஆத்மநேச ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் ஆடி பதினெட்டாம் தேதி முன்னிட்டு கோயிலில் ஆஞ்சநேயர் சன்னிதானத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டி ஆஞ்சநேயரை வழிபட்டனர். கோயில் ஸ்தாபகர் ஜெயராமன் சிறப்பு பூஜை செய்தார். பொதுமக்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.
கரூர் வெண்ணைமலை ஆத்மநேச ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு
previous post