கரூர், ஆக. 4: இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் கலைஞர் அறிவாலயத்தில் தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.எல்.ஏக்கள் இளங்கோ, மாணிக்கம் சிவகாமசுந்தரி, மாநகரச் செயலாளர் எஸ்பி கனகராஜ், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் மாநகர பகுதி செயலாளர் கரூர் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், ஆர்.எஸ்.ராஜா, ஜோதிபாஸ், விஜிஎஸ்.குமார், புகளூர் நகராட்சி தலைவர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள், சாலை சுப்பிரமணியன், காலனி செந்தில், கோயம்பள்ளி பாஸ்கரன், நெடுங்கூர் கார்த்தி, வி .கே. வேலுச்சாமி, பி.முத்துக்குமாரசாமி, எம்.ரகுநாதன், கே.கருணாநிதி, முன்னாள் கரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.கந்தசாமி, இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல், மாநகர துணை செயலாளர் எம். பாண்டியன், மாவட்ட திமுக துணைச் செயலாளர் எம்.எஸ்.கருணாநிதி, ரமேஷ் பாபு, மகேஸ்வரி, வக்கீல் ரமணி, மாவட்ட திமுக நிர்வாகிகள் காஜா நசீர் அகமது, மாவட்ட விளையாட்டு பிரிவு அமைப்பாளர் விக்னேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் கராத்தே பூபதி , கார்த்திக், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாலை ரமேஷ், வளர்மதி சம்பத்குமார், தேவி ரமேஷ், யசோதா , சாந்தி பாலாஜி, பொதுக்குழு உறுப்பினர் விகேடி.ராஜ் கண்ணு, சுற்றுச்சூழல் பிரிவு அமைப்பாளர் சாவி நல்லுசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட திமுக சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு
previous post