கரூர்: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நாச்சிமுத்து என்பவர் தோட்டத்தில் ஆட்டை கொன்றது சிறுத்தை தான் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் சோதனையில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு நடந்து வருவதாக மாவட்ட வன அலுவலர் சரவணன் கூறியுள்ளார்….