கரூர்,நவ.21: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தென் மாவட்டங்களில் தொடர்ந்து, தேவேந்திர குல வெள்ளாளர் சமுதாய மக்கள் தாக்கப்படுவதை கண்டிப்பது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.