கரூர், செப். 2: சீத்தாப்பழ சீசனை முன்னிட்டு மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சீத்தாப்பழ விற்பனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிடத்தக்க பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மா, பலா, வாழை போன்ற முக்கனிகள் கரூர் மாநகர பகுதிகளில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சீசனுக்கு ஏற்ப பழ வகைகளும் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தர்ப்பூசணி, கொய்யா, ரம்டன், பிளம்ஸ், பேரிக்காய் போன்ற அனைத்து வகையான பழங்களும் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மருத்துவ குணம் வாய்நத சீத்தாப்பழங்கள் கரூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வியாபாரிகளால் மொத்தமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சேலம் மாவட்டம் மேச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சீத்தாப்பழங்கள் மொத்தமாக கொண்டு வரப்பட்டு கிலோ ரூ. 100 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது.