கரூர், மே 28: கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும்கரூர் வைசியா வங்கி சார்பில் பக்தர்களுக்கு குங்கும பிரசாதம் வழங்குப்படுவது வழக்கம். அதன்படி இந்தண்டும் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு குங்கும பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கரூர் வைசியா வங்கி நிர்வாக இயக்குனர் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு பக்தர்களுக்கு குங்கும பிரசாதம் வழங்கினார். முன்னதாக மாரியம்மன் கோயிலில் நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு தரிசனம் செய்தார். அவருக்கு பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் வரவேற்று பொன்னாடை வழங்கி சிறப்பித்தார்.