தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயிலில் கரூர் மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். கூடுதல் சிறப்பு என்னவென்றால் இக்கோயிலில் திருவிழா நடைபெறும் போது திரும்பிய திசை எல்லாம் அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக விளம்பர நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக சேவகர்கள் என எங்கு பார்த்தாலும் பக்தர்களுக்கு நினைத்த சைவ உணவுகளை விரும்பி வழங்குகின்றனர். இதனால் கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு உண்ணுவதற்கு ஓட்டல்களை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவிற்கு கரூர் பகுதியில் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மத்திய கிழக்கு பகுதி மாநகர திமுக பிரதிநிதி வடிவேல் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.