கரூர், பிப். 19: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமாகவுண்டனூர் பகுதியை ஒட்டி அம்மன் நகர் உள்ளது. பசுபதிபாளையம், தெரசா கார்னர், சுங்ககேட் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருததுவமனைக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் அம்மன் நகர் வழியாகத்தான் சென்று வருகின்றனர்.அம்மன் நகரின் இருபுறமும் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.
ஆனால், இந்த பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் மோசமான நிலையில்தான் இந்த பகுதி உள்ளது.மேலும், அம்மன் நகரில் போதிய வடிகால் வசதி அமைக்காத காரணத்தினாலும், சாலைகள் செப்பனிடாத காரணத்தினாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, அம்மன் நகரைப் பார்வையிட்டு சாக்கடை வடிகால் வசதி, சாலை மேம்பாடு போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.