கரூர் : கரூர் மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி தொடங்கியது கரூர் மாநகராட்சியில் ரூ.7.50 கோடி மதிப்பில் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி தொடங்கியது. இதுபற்றிய விவரம் வருமாறு: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் வாங்கபாளையம், வெங்கமேடு, ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம், பசுபதிபாளையம், கோவைரோடு மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட விரிவாக்க பகுதிகளில் வீடுகள் மற்றும் உணவு விடுதிகள் தனியார் அமைப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கரூர் வாங்கல் சாலை அரசு காலணி அருகே சுமார் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டது. தற்போது 95500 மெட்ரிக் டன் அளவிற்கு குவிந்துள்ளது. நீண்ட நாட்களாக சேகரிக்கப்பட்ட குப்பைகளை தீயிட்டு கொளுத்தாமல் அப்புறப்படுத்தி உரமாக பயன்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.