கரூர், ஜூன். 25: கரூர் பேருந்து நிலையத்தின் உட்புறம் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறையை சுற்றிலும் ஆக்ரமிப்புகள் உள்ளன. இதனை சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது.
இந்த பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனியறை ஒதுக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இதனை சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திட முடியாத நிலையில் ஆண்கள், பெண்கள் உட்பட அனைவரும் அறையின் நுழைவுவாயிலில் அமர்ந்து கொள்வதாக கூறப்படுகிறது, இதுபோன்ற நிகழ்வுகள் தினசரி நடைபெறுகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் இதனை பயன்படுத்த நினைத்தாலும் அதுபோல செயல்பட முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையின்றி உள்ள அத்துமீறல்களை சரி செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.